செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (17:07 IST)

ஆப்கானிஸ்தானில் விமானம் கடத்தல்

ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களை அழைத்துவரச் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சி அதிகாரம் சமீபத்தில் தாலிபான்களின் கைக்கு வந்தது. அந்நாட்டு அதிபர் ஓமன் நாட்டிக்குப் பணத்துடன் தப்பி ஓடிவிட்டதாகத் தகவல் வெளியான நிலையில் அங்கிருந்து வேற்று நாட்டவர்கள் தங்கள் சொந்த நட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து  மக்களை மீட்கச் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டுள்ளது.

மீட்புப் பணிக்காக ஆப்கானிஸ்தான் சென்ற தங்கள் நாட்டின் விமானத்தை மர்ம நபர்கள் மீட்டுள்ளதாக உக்ரைன் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, உக்ரைன் வெளியுறவுத்துரை அமைச்சர்,  தங்கள் நாட்டின் விமானத்தைக் கடத்தியவர்கள் அதை ஈரானிற்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.