1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 16 ஜூலை 2018 (20:45 IST)

ரேடியேட்டர் தண்ணீரை குடித்து 7 நாட்கள் உயிரை கையில் பிடித்திருந்த இளம்பெண்

கார் விபத்தில் சிக்கிய இளம்பெண் ஒருவர் ஏழு நாட்களாக வெறும் ரேடியேட்டர் தண்ணீரை மட்டுமே குடித்து உயிரை கையில் பிடித்து வைத்திருந்த ஆச்சரியமான சம்பவம் ஒன்று கலிபோர்னியாவில் நடந்துள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஏஞ்சலா ஹெர்னாண்டெஸ். இவர் தனது சகோதரியின் வீட்டுக்கு செல்வதற்காக காரில் கடந்த 6ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். ஆனால் வழியில் உள்ள மலைமுகடு ஒன்றில் மோதி இவரது கார் விபத்துக்குள்ளானது. 
 
மலைமுகட்டில் இவரது கார் சிக்கியிருந்ததால் அந்த வழியாக சென்ற யாரும் இவரையும் இவரது காரையும் கவனிக்கவில்லை. படுகாயத்துடன் காரிலேயே ஏழு நாட்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு ஏஞ்சலா இருந்துள்ளார். உணவு, தண்ணீர் கூட இல்லாததால் காரில் உள்ள ரேடியேட்டர் தண்ணீரை குடித்தே ஏழு நாளும் இவர் சமாளித்துள்ளார். 
 
இந்த நிலையில் அந்த பகுதி வழியாக வாக்கிங் சென்ற இருவர் ஏஞ்சலாவின் முனகல் சத்தம் கேட்டு உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். தற்போது மருத்துவமனையில் உடல்நிலை தேறி வரும் ஏஞ்சலாவை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.