செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 23 டிசம்பர் 2017 (19:25 IST)

ரூ.64,000-த்திற்கு சிகரெட்டுக்களை திருடிய கொள்ளையர்கள்!!

கலிபோர்னியாவில் ரூ.64,000 மதிப்பில் சிகெரெட்டுகளை கொள்ளையர்கல் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கலிபோர்னியா அருகிலிலுள்ள மத்திய பள்ளதாக்கு பகுதியில் சூப்பர் மார்கெட் ஒன்றில், இரண்டு முகமூடி திருடர்கள் கடை உரிமையாளரை அடித்து, அங்கிருந்த விலை உயர்ந்த சிகரெட்டுக்களை மொத்தமாக திருடி சென்றுள்ளனர். 
 
அவர்கள் கொள்ளையடித்த மொத்த சிகரெட்டுக்களின் மதிப்பு சுமார் 64 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து,  சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. 
இந்த சிசிடிவி பதிவை வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.