செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2017 (15:13 IST)

டாட்டூ மோகம்: ஊதா நிறத்தில் கண்ணீர்; பார்வை இழந்து தவிக்கும் பெண்!!

டாட்டூ மோகத்தால் கண்ணில் டாட்டூ வரைந்த பெண்ணிற்கு பார்வை பறிபோன சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
கனடாவை சேர்ந்த 24 வயது காட் காலிங்கர் சமீபத்தில் கண்ணில் டாட்டூ போட்டுக்கொண்டார். டாட்டூ போட்டு கொண்ட பிறகு அவரது கண்ணிலிருந்து ஊதா நிறத்தில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. 
 
இதனால் மருத்துவமனையில் சிகிச்சைகாக சென்ற அவரும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கண் பெரிதாக வீங்கி இமைகள் திறக்க முடியாமல் போய் பார்வை பறிபோய் விட்டது. 
 
டாட்டூ மை கண் கார்னியாவை பாதித்துவிட்டதால், பார்வை இழப்பு நேரிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், லட்சணக்கில் பணம் செலவு செய்தும் எந்த வித பலனும் இல்லை. 
 
இறுதியாக ஒரு அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்திருக்கிறார் காலிங்கர். மேலும், இதுபோன்று பிறர் செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.