திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (23:02 IST)

மன்னிப்பு கேட்டும் டார்ச்சர் கொடுப்பதா? டி.ராஜேந்தருக்கு விஷால் கண்டனம்:

இன்று நடைபெற்ற 'விழித்திரு' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தன்ஷிகாவை டி.ராஜேந்தர் அவமதித்து அழ வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் டி.ராஜேந்தருக்கு நடிகர் சங்க தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



 
 
இன்றைய 'விழித்திரு' பிரஸ்மீட்டில் டி.ராஜேந்தரின் பெயரை கூற மறந்ததற்காக மீண்டும் மீண்டும் தன்ஷிகாவை டார்ச்சர் செய்து பேசியது, அதிலும் குறிப்பாக மன்னிப்பு கேட்டபோதும் அந்த மன்னிப்பை ஏற்று கொள்ளாமல் தொடர்ந்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
 
பல்திறமை வாய்ந்த ஒரு அனுபவமுள்ள டி.ராஜேந்தருக்கு ஒரு மேடையில் பேசும்போது ஒருசில பெயர்கள் விட்டுவிடுவது என்பது வழக்கமான ஒன்றுதான் என்பது தெரிந்திருக்கும். நான் கூட பல மேடைகளில் ஒருசிலரின் பெயர்களை விட்டுளேன்.
 
இந்த நிலையில் தன்ஷிகா மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி காலில் விழுந்தும், மகள் வயதுள்ள தன்ஷிகாவை மன்னித்து பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளாமல் டி.ராஜேந்தர் பேசியது கண்டனதுக்குரியது
 
சினிமா உலகில் ஒரு பெண் சாதிப்பது என்பது பெரிய விஷயம். அந்த வகையில் சாதித்து வரும் தன்ஷிகாவை எனக்கும் ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். இந்த சர்ச்சையை டி.ராஜேந்தர் தவிர்த்திருக்கலாம் என்பதோடு எனது கடுமையான கண்டனத்தை மீண்டும் பதிவு செய்கிறேன்
 
இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.