வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (18:58 IST)

”பல் வலிக்கு க்ரீம் தேய்க்க போய் இப்படி ஆகிடுச்சே”..பெண்ணுக்கு நடந்த பரிதாபம்

பல் வலிக்காக க்ரீம் தடவிய பெண்ணிற்கு, ரத்தம் நீல நிறமாக மாறிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் 25 வயது இளம்பெண் ஒருவர், பல நாட்களாக தீராத பல் வலியால் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் ஒரு நாள் பென்ஸோகெய்ன் எனும் வலி நிவாரண மருந்தினை வாங்கி ஒரே இரவில் அந்த மருந்து முழுவதையும் பற்களில் தேய்த்துள்ளார்.

அடுத்த நாள் எழும்போது அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெண்ணின் உடல் முழுவதும் நீல நிறமாக மாறியுள்ளது. இதனை கண்டு பதறிப்போன அப்பெண், அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மெதெடா குளோபினிமியா என்னும் நோய்க்கிருமி இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அப்பெண்ணின் ரத்தம் நீல நிறமாக மாறி இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

இதற்கு என்ன காரணம் என கேட்டபோது, ரத்த சிவப்பணுக்களின் வடிவம் மாறி திசுக்களுக்கான ஆக்சிஜனை வழங்காததால் இவ்வாறு நீல நிறமாக ரத்தம் மாறியுள்ளது என மருத்துவர்கள் கூறிகின்றனராம். இதனால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிப்படைந்து உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என கூறியுள்ளனர். எனினும் பின்னர் மெத்தலின் ப்ளூ என்கிற மருந்தை கொடுத்து தற்காலிகமாக இந்த பிரச்சனையை சரி செய்துள்ளனர்.

மேலும் அந்த பெண் பயன்படுத்திய மருந்தில் இறைச்சி கெட்டு போகாமல் இருப்பதற்கான வேதி பொருட்கள் சேர்க்கப்படுவதாகவும், இதற்கு முன் இந்த மருந்தை பயன்படுத்திய 3 பேர் இறந்துள்ளதாகவும் அமெரிக்க உணவு மற்றும் கட்டுப்பாடு நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.