ஒரே மாதத்தில் 4 திருமணம், இன்னும் பல: தாய்லாந்த் பெண்ணின் பலே திட்டம்!!
தாய்லாந்தில் பணம் சம்பாதிக்க திருமண நாடகமாடி பெண் ஒருவர் 11 ஆண்களை ஏமாற்றியுள்ளார். அந்த பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் உள்ள நங் ஹாய் மாகாணத்தை சேர்ந்த பெண் ஜரியாபார்ன் புயாயய். பணம் சம்பாதிக்க இந்த பெண் புதிய முறையை கையாண்டாள்.
தாய்லாந்து நாட்டின் பாரம்பரியபடி திருமணம் செய்யும் பெண்ணுக்கு ஆண் வரதட்சணை பணம் வழங்க வேண்டும். எனவே பணம் சம்பாதிக்க ஜரியாபார்ன் திருமண மோசடியை கையாண்டாள்.
இதுவரை 11 ஆண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடம் இருந்து வரதட்சணையாக ரூ.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம்வரை வசூலித்துள்ளார். பணம் மட்டுமின்றி கார் மற்றும் லாரி போன்றவற்றையும் பெற்றாள்.
பின்னர் அவர்களுடன் சேர்ந்து வாழாமல் சண்டை போட்டு பிரிந்து வந்துள்ளார். இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 4 பேரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவளிடம் ஏமாந்த ஆண்கள் போலீசில் புகார் செய்ய, தற்போது போலீஸார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.