சூட்கேசில் இருந்த இளம்பெண்ணின் பிணம்: இரண்டு இளைஞர்கள் கைது
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் அங்கிதா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்னர் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் வைத்து கர்நாடக மாநிலத்தின் எல்லையில் வீசப்பட்டிருக்கின்றார். இதுசம்பந்தமாக போலீசார் இரண்டு பேர்களை கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அங்கிதா, ஒரு பொறியாளர். மும்பையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த திங்கள் அன்று தோழியின் பார்ட்டி ஒன்றுக்கு சென்றுள்ளார். பார்ட்டி முடிந்தவுடன் நிகிலேஷ் மற்றும் அக்சய் ஆகியோர்களுடன் மும்பை திரும்பியுள்ளார்.
காரில் செல்லும்போது ஒரு இடத்தில் காரை நிறுத்தி இருவரும் மாறி மாறி அங்கிதாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அங்கிதாவை கொலை செய்து அதில் அங்கிதாவின் பிணத்தை திணித்து காரிலேயே கோவா-கர்நாடகா எல்லைக்கு சென்று சூட்கேசை தூக்கி எறிந்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் நிகிலேஷ் மற்றும் அக்சய் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அங்கிதா, ஒரு போலீஸ் அதிகாரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.