வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (23:59 IST)

நீட் தேர்வால் அடி வாங்கிய நாமக்கல் மாவட்டம்! ஒருவேளை நீட் நல்லதுதானோ?

நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண்கள் எடுத்த அரியலூர் அனிதாவுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை என்பது நிச்சயம் வேதனையே. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அனிதா போன்று உண்மையாகவே உயிரை கொடுத்து படித்து நீட் காரணமாக சீட் கிடைக்காதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதே நேரத்தில் நீட் காரணமாக ஒரு நல்லதும் நடந்துள்ளது.



 
 
11ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 12ஆம் வகுப்பு பாடங்களை மட்டுமே இரண்டு வருடங்கள் படித்து, 12ஆம் வகுப்பு தேர்வின்போது ஆசிரியர்களின் உதவியோடு காப்பியடித்து அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் நாமக்கல் மாவட்ட மாணவர்கள் என்பது தெரிந்ததே.
 
இந்த மாவட்டத்தில் படிக்கும் மாணவர்கள் தான் மிக அதிக அளவில் ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ் சீட் பெறுவார்கள். ஆனால் நீட் காரணமாக இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் செம அடி வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு 957 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் வெறும்109 மாணவர்களுக்கு மட்டுமே சீட் கிடைத்துள்ளது. மற்ற மாவட்ட மாணவர்களுக்கு உண்மையாக கிடைக்கக்கூடிய சீட்களை இந்த மாவட்டத்து மாணவர்கள் ஆக்கிரமித்து வந்த நிலையில் இந்த ஆண்டு இது தடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நீட் ஒருவேளை நல்லது தானோ? என்ற சிந்தனையும் வருவதை தவிர்க்க முடியவில்லை.