செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 ஜூன் 2021 (13:48 IST)

2025ல் முடிவுக்கு வருகிறது விண்டோஸ் 10: மைக்ரோசாப்ட் அறிவிப்பு

வரும் 2022ஆம் ஆண்டு விண்டோஸ் 10 முடிவுக்கு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 
 
தற்போது விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உலகம் முழுவதும் பேராதரவுடன் செயல்பட்டு வருகிறது என்பதும் மில்லியன் கணக்கானோர் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தான் தங்களது கணினியில் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது விண்டோஸ் 11 தயாராகி விட்டதாகவும் வரும் ஜூன் மாதம் 24ஆம் தேதி அதனை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ள மைக்ரோசாப்ட், இதனை அடுத்து பழைய பதிப்பான விண்டோஸ் 10, ஆபரேட்டிங் சிஸ்டத்தை வரும் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது என அறிவித்துள்ளது. தற்போது அறிமுகமாகவுள்ள விண்டோஸ் 11 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் அதிக வசதிகள் இருக்கும் என்று மைக்ரோசாப்ட் உறுதி செய்து கொடுத்துள்ளது