1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (16:31 IST)

மைக்ரோசாப்ட்டில் வேலை, ஆண்டுக்கு ரூ. 2 கோடி சம்பளம்: இந்திய பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

மைக்ரோசாப்ட்டில் வேலை, ஆண்டுக்கு ரூ. 2 கோடி சம்பளம்:
இந்திய பெண் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூபாய் 2 கோடி சம்பளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது பெரும் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது 
 
ஐதராபாத்தை சேர்ந்த முதுகலை படிப்பு படித்து வரும் மாணவி தீப்தி நர்குட்டி. இவர் முதுகலை இரண்டாமாண்டு படிக்கும் போதே பல முன்னணி நிறுவனங்கள் இவருக்கு வேலை தர முன்வந்தன. இந்த நிலையில் உலகிலேயே மிகச் சிறந்த நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிய தற்போது அவர் ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஆண்டுக்கு ரூபாய் 2 கோடி சம்பளம் உட்பட பல்வேறு வசதிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதுகுறித்து நர்குட்டியின் பெற்றோர்கள் கூறியபோது முதுகலை இரண்டாமாண்டு படிக்கும் போதே பல நிறுவனங்கள் தனது மகளுக்கு வேலை தர முன் வந்ததாகவும் அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தனது மகள் தேர்வு செய்ததாகவும் பெருமையுடன் கூறியுள்ளனர். இந்த பெண்ணுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்