புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (15:42 IST)

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின்  முக்கிய ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்க அரசின் வற்புறுத்தல் காரணமாக சுவீடன் பாலியல் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதன் காரணமாக அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். எனவே அவரை கைது செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இன்று போலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் உள்ள தூதரகத்தில் வைத்தே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக ஈக்வடார் தூதரகத்தில் இருந்து வெளியான தகவலில் ஜூலியன் அசாஞ்சே இன்னும் சில தினங்களில் தூதரகத்தை விட்டு வெளியேறலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஜூலியன் அசாஞ்சே கைது நடைமுறைகள் முடிந்த பின்னர் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.