14,000-த்தை கடந்த குரங்கு அம்மை நோய் பாதிப்பு - WHO!
உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலும், தற்போது ஆப்பிரிக்க தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
சில நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பில் சரிவை பதிவு செய்யத் தொடங்கியுள்ளன, ஆனால் இந்த வாரம் ஆறு நாடுகள் தங்கள் முதல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளன. மேலும் தடுப்பூசிகள் மற்றும் நோயறிதல்களின் உலகளாவிய விநியோகம் இந்த நேரத்தில் சமமாக இல்லை, மேலும் தடுப்பூசிகள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய WHO வேலை செய்யும் என்று டெட்ரோஸ் கூறினார்.