1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (07:48 IST)

கொரோனாவுக்கு மருந்து கிடைக்காமலேயே போகலாம்: உலக சுகாதார மைய இயக்குனரின் அதிர்ச்சி பேட்டி

கொரோனாவுக்கு கடைசிவரை மறந்து கண்டு பிடிக்காமல் போகலாம் என்றும் இதனால் அனைவரும் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தால், சோப்பு போட்டு கைகளை கழுவுதல் ஆகியவற்றை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என உலக சுகாதார மைய இயக்குனர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் 1.84 கோடிக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் நிலையில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கி விட்டது. இந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலக விஞ்ஞானிகள் மிகத் தீவிரமாக உள்ளனர். ஒரு சில நாடுகள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும் சோதனை நிலையில் உள்ளதாகவும் அறிவித்துள்ளன 
 
இந்த நிலையில் உலக சுகாதார மைய இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப் பட்டதாக இதுவரை கூறிய போதிலும் அவை எதுவுமே இன்னும் உறுதி செய்யப்படவில்லை அதுமட்டுமின்றி கொரோனாவுக்கு கடைசிவரை மருந்து கண்டுபிடிக்காமல் கூட போகலாம் என்றும், இதனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் சுகாதாரத்துறையும், மக்களிடம் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை நிரந்தரமாக கடைபிடிக்கும் படி வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே ஒரு சில நோய்களுக்கு பல வருடங்களாகியும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் நிலையில் கொரோனாவும் அந்த பட்டியலில் சேர்க்கப்படுமோ? என்ற அச்சம்உலக மக்களிடையே உள்ளது. எனவே உலகில் இனி தனிமனித இடைவெளி முகக்கவசம் ஆகியவை நிரந்தரம் ஆகிவிடுமோ என்ற அச்சம் மனித இனத்திற்கு உள்ளது