ஆப்கானின் இடைக்கால பிரதமர்: இந்த முல்லா ஹஸன் அகுந்த்?
ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக முல்லா ஹஸன் அகுந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யார் இவர் என்ற விவரம் பின்வருமாறு...
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக முல்லா ஹஸன் அகுந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த முல்லா ஹஸன் அகுந்த்?
இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுந்த் முந்தைய தலிபான்கள் (1996-2001) ஆட்சியில் சக்தி வாய்ந்த தலைவராக இருந்துள்ளார். தலிபான்கள் ஆட்சியில் அவர் துணை பிரதமராகவும் வெளியுறவு மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
முல்லா ஓமருடன் சேர்ந்து தலிபான் அமைப்பை நிறுவியவர்களில் இவரும் ஒருவராவார். இவர் முல்லா ஓமருக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் இருந்த உலகப் புகழ் பெற்ற புத்தர் சிலையை குண்டு வைத்து தகர்க்க மூலகாரணமாக இருந்தவர் இவர்.