மதுபானம் கொடுத்து பெண்கள் வன்கொடுமை; உலக சுகாதார ஊழியர்கள் அட்டூழியம்!
ஈபோலா காய்ச்சலுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக காங்கோ சென்ற உலக சுகாதார அமைப்பு ஊழியர்கள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோ நாட்டில் ஈபோலா வைரஸ் காய்ச்சலிம் தாக்கம் கடந்த 2018ம் ஆண்டில் அதிகமாக இருந்தது. இதனால் பல நாடுகள் காங்கோவுடனான போக்குவரத்தையே அப்போது துண்டித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் காங்கோவில் ஈபோலா பாதித்தவர்களுக்கு மருத்துவம் பார்க்க உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
அங்குள்ள 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மதுபானம் கொடுத்து மருத்துவமனையிலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் இதன் மீதான விசாரணையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.