1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (11:40 IST)

ஆப்பிரிக்காவில் தங்கமலை.. தங்கத்தை பைகளில் அள்ளிய மக்கள்! – தடை விதித்த அரசு!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மலை பகுதி ஒன்றில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கத்தை அள்ளி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள லுகிகி என்ற கிராமம் அருகே உள்ள மலை ஒன்றில் தங்கம் கிடைப்பதாக அங்குள்ள மக்களுக்கு தகவல் பரவியுள்ளது. அங்கு சென்று அந்த மலையில் உள்ள மண்ணை அலசியதில் அதில் நிறைய தங்க தாதுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. உடனே அந்த மலையில் உள்ள மணலை மூட்டை மூட்டையாக கட்டிய மக்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று அலசி தங்கத்தை பிரித்து எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் வைரலாகி அரசின் செவிகளை எட்டிய நிலையில் உடனடியாக அந்த மலையை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து காவல் வீரர்களை நிறுத்தி தங்கம் அள்ள தடை விதித்துள்ளது காங்கோ அரசு