திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (09:14 IST)

அன்றே கணித்த WHO - ரெம்டெசிவிருக்கு இனி வேலை இல்லை ?

உலக சுகாதார நிறுவனம் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என எந்த ஆதாரமும் இல்லை என அறிவிப்பு. 

 
கொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிரை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியிருந்தாலும், சம்பந்தப்பட்ட நாடுகள் இது குறித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாகவே, உலக சுகாதார நிறுவனம் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என எந்த ஆதாரமும் இல்லை. எனவே கொரோனா நோயாளிகள் எத்தகைய தீவிரமான நோய் பாதிப்பு உடையவராக இருந்தாலும் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தது. 
 
ரெம்டெசிவிர் மருந்தானது ஜிலெட் சயின்ஸஸ் என்ற மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து ஆகும். இது இனி கொரோனா வைரஸை எதிர்த்து போராட உதவாது என  உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்துள்ளது.