புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (10:23 IST)

பயண கட்டுபாட்டை மீறி 23 நாடுகளில் ஓமிக்ரான் பரவல்: WHO அதிர்ச்சி தகவல்!

ஓமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவி உள்ளது என  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பரவலை தடுக்க பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 
 
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது, ஓமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவி உள்ளது. பயண தடைகள் மூலம் ஓமிக்ரான் தொற்று பரவலை தடுக்க முடியாது. பயண தடைகளால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் சுமையாக மாறிவிடும் என்றும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. 
 
இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்த முதற்கட்ட அடிப்படை விவரங்கள் ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண காய்ச்சல், உடல் வலி, தொண்டை கரகரப்பு போன்றவை ஒமிக்ரான் வைரசின் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதித்து குணமடைந்தவர்களை இது எளிதில் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் குறைபாட்டுடன் சிகிச்சை பெற்றவர்களை ஒமிக்ரான் தாக்கும் வாய்ப்பு. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் தொற்று மூலம் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்களுக்கு பெரிய அளவுக்கு பாதிப்புகள் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.