வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 16 மார்ச் 2023 (13:01 IST)

உக்ரைனில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதலா? ரஷ்யா மீது குற்றச்சாட்டு..!

Ukraine
உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் தற்போது வெள்ளை பாஸ்பரஸ் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது என்பதும் இந்த தாக்குதல் மூலம் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ரஷ்யா நவீனராக குண்டுகளை உக்ரைன் மீது வீசி வருவதாக கூறப்படும் மீது கிழக்கு உக்ரைனில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யா வீசி உள்ளதாகவும் இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த குற்றச்சாட்டை உக்ரைன் அரசு தெரிவித்து அதற்கான வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் ரஷ்யா இதுவரை இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva