திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 27 அக்டோபர் 2018 (14:47 IST)

மேல்முறையீடு தாமதமானால்? டிடிவி தினகரனின் அடுத்த ஸ்கெட்ச் இதுதான்!

18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் பதவி தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பில் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் பதவி இழந்தனர். அதிமுக ஆட்சியும் எந்த ஆபத்தும் இன்றி தப்பியுள்ளது. விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிகிறது. 
 
இந்நிலையில் தினகரன் தலைமையில் தகுதி இழந்த 18 எம்.எல்.ஏக்கள் மதுரையில் ஆலோசனை நடத்தி, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்தனர். 
 
அதன்படி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் வரும் 30 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் 3 வது நீதிபதி சத்தியநாராயணாவின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளனர். 
 
தற்போது தினகரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மேல்முறையீடு செய்து அதற்கு தீர்ப்பு வருவதற்கு காலம் தாழ்த்தப்பட்டால், மக்களை சந்தித்து இடைத்தேர்தலை சந்திக்க தயார் என கூறியுள்ளார்.