1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Ahmedabad-London Flight Cancelled After Accident: Technical Glitch?

விபத்துக்கு பின் அகமதாபாத் - லண்டன் செல்லவிருந்த விமானம் ரத்து.. தொழில்நுட்ப கோளாறா?

Ahmedabad
அகமதாபாத்திலிருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானமும், டெல்லியில் இருந்து பாரிஸ் செல்லும் விமானமும் இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
AI159 விமானம் டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்தடைந்தது. அது பிற்பகல் 1:10 மணிக்கு லண்டன் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ரத்து காரணமாக 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
 
ஒரு பயணி "நான் மதியம் 1 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் கேட்விக் செல்ல இருந்தேன், ஆனால் விமானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக  தெரிந்தது. விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தையோ அல்லது கட்டணத்தை திரும்ப பெறுவது பற்றிய தகவல்களையோ விமானப் பணியாளர்கள் கூறவில்லை," என்று  தெரிவித்தார்.
 
ஜூன் 12 அன்று நடந்த மிக மோசமான விமான விபத்துக்கு பிறகு அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் முதல் விமானம் இதுதான். அதுவும் ரத்தாகிவிட்டது.
 
அதேபோல் டெல்லியில் இருந்து பாரிஸ் செல்லும் மற்றொரு ஏர் இந்தியா விமானமும், ஹைட்ராலிக் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. சமீபகாலமாக, பல ஏர் இந்தியா விமானங்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பிரதமர் மோடிக்கு இப்படி ஒரு வரவேற்பா? காலில் விழுந்து வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்!