1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 17 ஜூன் 2025 (15:05 IST)

பிரதமர் மோடிக்கு இப்படி ஒரு வரவேற்பா? காலில் விழுந்து வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்!

PM Modi Cyprus Visit

தீவு நாடான சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் மோடியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் காலை தொட்டு வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

 

ஜி7 உச்சி மாநாட்டிற்காக கனடா சென்ற பிரதமர் முன்னதாக அரசு முறை பயணமாக தீவு நாடான சைப்ரஸ் நாட்டிற்கு சென்றார். அங்கு அவரை அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் விமான நிலையத்தில் வரவேற்றார். அங்கிருந்து அதிபர் மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அதை தொடர்ந்து இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டனர். சைப்ரஸ் நாட்டின் உயரிய விருந்தான 3ம் மக்காரியோஸ் கிராண்ட் கிராஸ் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

 

அங்கிருந்து நிகோசியா வரலாற்று மையத்திற்கு சென்ற மோடியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேலா கைத்ரியோட்டி என்பவர் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K