வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (13:06 IST)

பாலஸ்தீனத்தை அபகரிக்கவில்லை.. ஹமாஸை ஒழிக்கிறோம்! – இஸ்ரேல் விளக்கம்!

Hamas
பாலஸ்தீன பகுதியான காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியை அபகரிக்க தாங்க நினைக்கவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பு செயல்படும் பகுதியான காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் பாலஸ்தீன் மக்கள் பலரும் பலியாகி வருகின்றனர். போரை நிறுத்த ஐநா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும் இஸ்ரேல் செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. ஹமாஸ் கொண்டு சென்ற இஸ்ரேல் பணையக்கைதிகளை மீட்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்து பேசிய நிலையில், பாலஸ்தீனிய பொதுமக்கள் போர் நடக்கும் இடங்களை விட்டு வெளியேறுவதற்காக தினசரி 4 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதையடுத்து போர் பகுதிகளில் இருந்து மக்கள் நடந்தே வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காசாவை அபகரிப்பது தங்கள் நோக்கம் அல்ல என்றும், ஹமாஸை ஒழிக்கவே போர் செய்து வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K