1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (18:13 IST)

ஒரே இரவில் 200 பேர் உயிரிழப்பு: சரமாரியாக தாக்கும் இஸ்ரேல் ராணுவம்..!

இஸ்ரேல் ராணுவத்தின் சரமாரியான தாக்குதல் காரணமாக ஒரே இரவில் 200 பேர் இறந்து விட்டதாக  தீவிரவாத இயக்கம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த மாதம் ஆரம்பித்த  இஸ்ரேல்  மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் இன்னும் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் பொருள் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 
 
இந்த நிலையில் நேற்று இரவு  இஸ்ரேல் ராணுவத்தின் சரமாரியான தாக்குதலில் ஒரே இரவில் 200 பேர் பலியாகி விட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கும் இடம், மருத்துவமனை ,ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருவதாக கூறப்படுகிறது. 
 
பொதுமக்களோடு பொதுமக்களாக ஹமாஸ் தீவிரவாதிகள் கலந்து இருப்பதாகவும் ஆம்புலன்ஸில் அவர்கள் தப்பித்து வருவதாகவும் அதனால் தான் இந்த தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.  
 
இந்த நிலையில் ஒரே இரவில் 200 பேர் பலியாக உள்ள நிலையில் இதில் பலர் பொதுமக்கள் என்றும் அப்பாவி குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் தீவிரமாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran