செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (15:32 IST)

கமலை ஜனாதிபதியாகப் பார்க்கவேண்டும் – நடிகர் பிரபு ஆசை !

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை ஜனாதிபதியாக பார்க்க அவரது தம்பிகள் அனைவரும் ஆசைப்படுவதாக நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.

கலைத்தாயின் தலைமகனான கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் தேதிதான் அவரது தந்தை சீனிவாசனின் நினைவு நாளும் ஆகும். இந்நிலையில் இன்று   கமலின் சொந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தைக்கு சிலை அமைக்க திறக்கவுள்ளார்.

இதற்காக பரமக்குடி சென்ற கமல் தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து பிறந்தநாளைக் கொண்டாடி விட்டு பின்னர் தந்தை சிலையை திறந்து வைத்தார். அதன்பின்னர் தெளிச்சாநல்லூரியில் நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் பிரபு ‘அண்ணன் கமல்ஹாசன் மீது அப்பா சிவாஜி கணேசனுக்கு அளவுகடந்த பிரியம் உண்டு. என் திரையுலக வாரிசு கமல் மட்டும் தான் என கூறுவார். தன்னை விட கமலுக்கு தொழில்நுட்பம் தெரியும் என்றும் அடிக்கடி சொல்வார். கமல்ஹாசனை ஜனாதிபதியாக பார்க்க வேண்டுமென திருமதி சாருஹாசன் சொன்னார்கள். அவருடைய தம்பிகளுக்கு எல்லாம் அவரை ஜனாதிபதியாக பார்க்க வேண்டும் என்பதுதான் ஆசை’ எனத் தெரிவித்தார்.