1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (16:12 IST)

கொரோனாவால் உணவுக் கிடைக்காத குழந்தைகள் – 7.5 கோடி ரூபாய் நிதி அளித்த பிரபல நடிகை !

ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால் குழந்தைகள் உணவின்றித் தவிக்கும் சூழலைத் தவிர்க்கும் பொருட்டு 7.5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் சீனாவில் தீவிரமடைய தொடங்கிய கொரோனா வைரஸ் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. தென் கொரியா, ஜப்பான் என மெல்ல பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது உலகத்தில் 5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 23300 பேருக்கு மேல் இறந்துள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு உலகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் தினப்படி கூலிக்கு வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால் பாதிக்கப்பட்டு பசியால் வாடும் குழந்தைகளுக்காக 7.5 மோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். நோ கிட் ஹங்ரி என்கிற அமைப்பிடம் நிவாரண நிதியை அவர் வழங்கியுள்ளார். இந்த பணம் பசியால் வாடும் குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.