திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (08:12 IST)

இலங்கையில் ஜனாதிபதி மாளிகை முற்றுகை: கொழும்புவில் ஊரடங்கு!

இலங்கையில் ஜனாதிபதி மாளிகை முற்றுகை: கொழும்புவில் ஊரடங்கு!
இலங்கையில் ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை அடுத்து தலைநகர் கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது விண்ணை முட்டும் அளவுக்கு விலைவசி உயர்ந்து உள்ளது. இதனால் பலரும் தமிழகத்திற்கு அகதியாக வந்து கொண்டிருக்கின்றனர்
 
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ஜனாதிபதியின் பொறுப்பற்ற ஆட்சியே என்று பொது மக்கள் கொதித்தெழுந்து போராட்டம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன