திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 6 செப்டம்பர் 2017 (13:14 IST)

ஆட்டுக்கறி விளம்பரத்தில் விநாயகர்; சர்ச்சையை கிளப்பிய ஆஸ்திரேலியா

விநாயகர் ஆட்டுக்கறி சாப்பிடுவதை போன்று வெளியாகியுள்ள விளம்பரத்துக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் இந்து சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


 

 
ஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் விற்பனை செய்யும் நிறுவனம் சர்ச்சைக்குரிய வீடியோ விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில், விருந்து நடக்கும் மேஜையில் விநாயகர், இயேசு, புத்தர் என மூவர் அமர்ந்து ஆட்டுக் கறியின் பெருமையை பேசி சாப்பிடுவது போல விளம்பரம் உள்ளது.
 
இந்து கடவுள் விநாயகரை அவமதிப்பதாக விளம்பரம் உள்ளது என ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் சமூக வலைதளங்களில் பலரும் இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறியதாவது:-
 
உங்கள் நம்பிக்கையையும் மீறி ஆட்டுக்கறி உங்களை ஒன்றிணைக்கும் என்பதையே விளம்பரத்தில் கூறியுள்ளோம் என்றார்.