1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:30 IST)

ரஷ்யாவுக்கு புது தலைவலி... NATO-வில் சேர விரும்பும் பின்லாந்த் & ஸ்வீடன்!

உக்ரைனை தொடர்ந்து பின்லாந்த் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டுவதால் ரஷ்யா அதிருப்தி இருப்பதக தகவல். 

 
நேட்டோவில் சேர முயன்றதாக கூறி உக்ரைன் மீது ரஷ்யா 48வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வந்தாலும் முன்னரே நேட்டோவில் இணைய மாட்டோம் என தெரிவித்துவிட்டது. இந்நிலையில் உக்ரைனை தொடர்ந்து பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. 
 
உக்ரைன் போருக்கு பிறகு நேட்டோ அமைப்பில் சேரும் முடிவில் பின்லாந்து மக்கள் 60% பேர் ஆர்வம் காட்டி உள்ளதாக பின்லாந்து கூறியுள்ளது. பின்லாந்தும் ஸ்வீடனும் ஆறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஒரு பகுதியாகும், அவை இராணுவக் கூட்டணிகளுடன் அணி சேராதவை. 
 
இந்நிலையில் இவ்விரு நாடுகள் நேட்டோவில் சேருவதற்கு வழக்கம் போல ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஐரோப்பாவில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வராது எனவும் நேட்டோ மோதலை நோக்கிய ஒரு கருவியாகவே உள்ளது எனவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.