ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை


Abimukatheesh| Last Modified திங்கள், 11 ஜூலை 2016 (15:38 IST)
இரவு நேரங்களில் ஸ்மார்போனுடன் நேரத்தை கழிப்பதால் கண் பார்வை பாதிக்கப்படும் என்று கண் மருத்துவ ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்து எச்சரிக்கை அளித்துள்ளனர்.

 

 
லண்டனில் உள்ள மருத்துவமனையில் 20 வயது பெண் ஒருவர், தனக்கு தற்காலிக பார்வையிழப்பு அடிக்கடி ஏற்படுவதாக மருத்துவரிடம் அனுகியுள்ளார். அதேபோல் 40 வயது பெண் ஒருவரும் இதே பிரச்சனையால் மருத்துவரை அனுகியுள்ளார்.
 
இரு பெண்களும் ‘ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ்’ என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்தனர். இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை பார்த்து கொண்டு இருப்பதே, இந்த பிரச்சனைக்கு காரணமாக உள்ளது என்பதை ஆய்வின் முடிவில் உறுதி செய்தனர்.
 
மேலும் இதையே வாடிக்கையாக பின்பற்றினால் நிரந்தர குருடு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :