கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு! – காரணம் என்ன?
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் பல நாடுகளும் பல்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகின்றன. அப்படியாக பயன்படுத்தப்படும் நிலையில் அந்த தடுப்பூசிகள் நம்பகமானவை என எப்டிஏ, உலக சுகாதார அமைப்பு போன்றவை பரிந்துரைத்தலும் அவசியமாக உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த இந்திய அரசு அவசர கால அனுமதி அளித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதை எப்டிஏ நிராகரித்து அனுமதி மறுத்துள்ளது. கோவாக்சின் சோதனை தரவுகள் முழுமையாக இணைக்கப்படாததால் முழுமையாக இணைத்து மீண்டும் விண்ணப்பிக்க எப்டிஏ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.