வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (11:14 IST)

ட்விட்டரை தடை செய்த நைஜீரியா! “கூ” செயலியில் புதிய கணக்கு!

நைஜீரியாவில் ட்விட்டர் தடை செய்யப்பட்ட நிலையில் நைஜீரிய அரசு இந்திய செயலியான “கூ”வில் புதிய கணக்கை தொடங்கியுள்ளது.

நைஜீரிய அதிபராக இருந்து வரும் முகமது புஹாரிக்கு எதிராக நைஜீரியாவில் மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு போர் மூளும் சூழல் உள்ள நிலையில் முன்னர் நடந்த உள்நாட்டு சண்டையை சுட்டிக்காட்டி ட்விட்டரில் அதிபர் முகமது புஹாரி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனால் அதிபரின் ட்வீட்டை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதனால் பதில் நடவடிக்கை எடுத்த நைஜீரிய அரசு ட்விட்டரை நைஜீரியாவில் தடை செய்துள்ளது. இந்நிலையில் தற்போது ட்விட்டருக்கு மாற்றாக நைஜீரிய அரசு, இந்திய செயலியான “கூ” வை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கூ செயலியை உருவாக்கியவர்களில் ஒருவராத ராதாகிருஷ்ணன் “கூ” தற்போது இந்தியாவை தாண்டி பறக்க தொடங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.