செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (11:37 IST)

ஜோ பிடன் ஆளுங்க ஏமாத்துறாங்க; ட்ரம்ப் குற்றச்சாட்டு! – அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் ஜோ பிடன் கட்சியினர் சதி செய்வதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் நடப்பு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் ஜோ பிடன் 227 வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளார், அதிபர் ட்ரம்ப் 210 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்தலில் ஜோ பிடன்தான் வெல்வார் என பலரும் கூறி வரும் நிலையில் அமெரிக்க தேர்தல் முடிவில் ஜோ பிடன் ஆதரவாளர்கள் சதி செய்துவிட்டதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜோ பிடன் ஆதரவாளர்கள் ட்ரம்ப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ள ஜோ பிடன் “அமெரிக்க அதிபர் தேர்தலில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். அதுவரை ஆதரவாளர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும்” என கூறியுள்ளார். இதனால் அமெரிக்க அரசியல் சூழலில் பரபரப்பு எழுந்துள்ளது.