1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஜூலை 2018 (17:35 IST)

15 வயதில் பி.எச்.டி; அசத்தும் இந்திய வம்சாவளி மாணவர்

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியான தனிஷ்க் என்ற 15வயது சிறுவன் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது பி.எச்.டி படிப்பை தொடங்க உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
பொதுவாக இந்தியாவில் பெரும்பால ஆராய்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சி படிப்பான பி.எச்.டி-ஐ முடிப்பதற்குள் 30வயதை கடந்து விடுகின்றனர். 
 
இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி 15வயது சிறுவன் தனிஷ்க் இன்ஜினியரிங் முடித்து விட்டான். அதைத்தொடர்ந்து தற்போது பி.எச்.டி படிப்பை தொடங்க உள்ளான்.
 
இதுகுறித்து அந்த சிறுவன் தனிஷ்க், மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனிஷ்க், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர்களை தொடாமல், அவர்களின் இதயத்துடிப்பை கண்டறியும் சாதனத்தையும் கண்டறிந்துள்ளார். 
 
புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்ட தனிஷ்க், புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறை குறித்தும், நோயை சரிசெய்வதற்கான வழிமுறை குறித்தும் ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், கலிபோர்னியா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிஷ்க், அடுத்த 5 வருடங்களுக்குள் தனது எம்.டி படிப்பை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.