1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (16:08 IST)

ஈரான் மீது பொருளாதார தடை: டிரம்ப் வெளியிட்ட லிஸ்ட்!

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க விலகியதால், இவ்விரு நாடுகளுக்கு மத்தியில் அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது. ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிப்பதில் தீவிரமாக உள்ளது. 
இந்நிலையில் இன்று அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது கடுமையான, ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைகளை அமல்படுத்தியது. அதன்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு செயலாக்க உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். 
 
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடை விவரம்:
 
# ஈரான் அரசாங்கத்தால் அமெரிக்க ரூபாய் நோட்டுகள் கொள்முதல் அல்லது கையகப்படுத்தல்.
# தங்கம் மற்றும் இதர விலையுயர்ந்த உலோகங்கள் ஈரான் வர்த்தகம்.
# கிராஃபைட், அலுமினியம், எஃகு, நிலக்கரி, மற்றும் தொழில்துறை செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள்
# ஈரானிய ரியால் நாணயத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள்
# இறையாண்மையின் கடனை வழங்குதல் தொடர்பான நடவடிக்கைகள்
# ஈரான் வாகனத்துறை
 
அமெரிக்காவின் இந்த செயலுக்கு ஈரான் ஜனாதிபதி இது ஒரு உளவியல் போர். இது ஈரானியர்களிடையே பிளவுகளை விதைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என கூறியுள்ளார்.