1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (08:14 IST)

கொரோனாவை தடுக்க குழந்தைகளுக்கு மாத்திரை! – அமெரிக்கா அனுமதி!

கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு மாத்திரை வழங்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டிருந்தாலும், 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏதும் இல்லை.

இந்நிலையில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள ”பேக்ஸ்லோவிட்” என்ற மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. சிறிய அளவிலான கொரோனா பாதிப்பை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட இந்த மாத்திரையை 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆரம்ப நிலை கொரோனா பாதிப்பில் உள்ளவர்களுக்கும் அளிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாத்திரையால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.