ரஷ்ய போர்க் கப்பல்களை அழிக்க ராக்கெட்டுகள்! – உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி!
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு மேலும் பல ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 3 மாத காலத்திற்கு மேல் போர் நடத்தி வரும் நிலையில் பல நாடுகளும் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகள் பல உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.
ஆனாலும் ரஷ்யாவின் கையே ஓங்கியுள்ள நிலையில் சமீபத்தில் உக்ரைனின் டான்பாஸ் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியது. முன்னதாக உக்ரைனுக்கு பல ஆயுத உதவிகளை அளித்திருந்த அமெரிக்கா தற்போது மேலும் சில ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. அதன்படி 7,812 கோடி ரூபாய் மதிப்பிலான கடற்படை கப்பல்களை தாக்கும் ராக்கெட்டுகள், ஹோவிட்சர் பீரங்கிகள், நவீன ராக்கெட் ஏவும் அமைப்புகள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா வழங்குகிறது.