திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (09:26 IST)

கூடவே சுத்துறிங்களே.. ரஷ்யாவுக்கு புத்தி சொல்ல கூடாதா? – சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!

சீன அதிபர் ஜின்பிங் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள நிலையில் போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து ஒரு ஆண்டு காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது. உக்ரைனின் பல பிராந்தியங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். நேட்டோ நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தொடர்ந்து போரை நடத்தி வருகிறது. ரஷ்யாவும் தொடர்ந்து பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுக்கு பல நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில்தான் தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு 3 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார், அங்கு அவர் ரஷ்ய அதிபர் புதினிடம் போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி பேசியபோது “உக்ரைன் நகரங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நிறுத்தவும், போர்குற்றங்களை தடுக்கவும் மற்றும் ரஷ்ய படைகளை உக்ரைனிலிருந்து திரும்ப பெறவும் சீன அதிபர் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பார் என நம்புகிறோம்.

ஆனால் மாறாக உக்ரைனின் பகுதிகளுக்குள் ரஷ்ய படைகளை விட்டு வைக்கும் வெறும் சண்டை நிறுத்த அழைப்புகளை சீனா மேற்கொள்ளும் என்றும், படைகளை அகற்றாத சண்டை நிறுத்தம் ரஷ்யாவுக்கு சட்டவிரோதா வெற்றியையே தரும் என்றும் கவலைக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K