உரைக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த பகுதிக்கு சென்ற ரஷ்ய அதிபர் புதின்... பரபரப்பு தகவல்..!
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் உக்ரைனின்பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் உக்ரைனிடமிருந்து ஆக்கிரமித்த மரியுபோல் என்ற பகுதிக்கு ரஷ்ய அதிபர் புதின் நேரடியாக சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நகரை மீட்டுருவாக்கம் செய்வது குறித்து புதிய முக்கிய ஆலோசனை செய்ததாகவும் இந்த ஆலோசனையில் ரஷ்ய அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது. மேலும் உள்ளூர் வாசிகளுடன் புதின் பேசியதாகவும் அந்த நகரை சீரமைத்து அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ய அவர் வாக்குறுதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
உக்ரைனின் வேறு எந்த நகரமும் மரியுபோல் நகரம் போஒல் பாதிக்கப்படவில்லை என்றும் மரியுபோல் மேயர் புதினிடம் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran