புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 ஜூலை 2021 (10:58 IST)

வரலாறு காணாத வெப்பநிலை - கனடாவில் இதுவரை 500 பேர் பலி!

கனடா மற்றும் அமெரிக்காவில் கொளுத்தி வரும் வரலாறு காணாத வெப்பநிலை காரணமாக மக்கள் திண்டாடி வருகின்றனர். 

 
கனடா மற்றும் அமெரிக்காவில் வெப்பநிலை அதிகமாக உள்ளது. அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவில் வெப்பத்தின் தாக்கத்தை தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. வெப்பத்தின் காரணமாக கனடாவில் இதுவரை 500 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.