சிக்கனுக்கு சாஸ் அனுப்பறியா.. இல்ல வெடிகுண்டு அனுப்பவா? – மிரட்டல் விடுத்த உணவு பிரியர்!
அமெரிக்காவில் சிக்கன் நகட்டுக்கு சாஸ் தராத உணவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாடிக்கையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல விதமான துரித உணவுகள் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. அவ்வாறாக அமெரிக்காவில் மக்களிடையே பிரசித்தமாக இருப்பது சிக்கன் நகெட்ஸ்.
இந்நிலையில் அமெரிக்காவில் கொல்விட்சர் என்ற நபர் மெக்டொனல்ட்ஸில் சிக்கன் நகெட்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைனில் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட சிக்கன் நகெட்ஸுக்கு சாஸ் வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கொல்விட்சர் உணவகத்திற்கு போன் செய்து வெடிக்குண்டு வைத்து உணவகத்தை அழித்து விடுவேன் என மிரட்டியதுடன், சாஸ் வைக்க மறந்த ஊழியரின் மூக்கை உடைப்பேன் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து உணவக ஊழியர்கள் அழித்த புகாரின் பேரில் கொல்விட்சர் கைது செய்யப்பட்டு பின் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.