அமெரிக்காவில் 13 பில்லியன் டாலர் முதலீடுகளை குவிக்கும் கூகுள்...

google
Last Updated: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (12:59 IST)
கூகுளை நினைத்து நம் தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய ஒரு  விஷயம் நம் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுளின் சி.இ.ஓ பதவியில் உள்ளதே ஆகும். 
இந்நிறுவனம் இந்த ஆண்டில் அமெரிக்காவில் 13 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் ,நெவேடா டெக்சாஸ் நெப்ராஸ்கா, தெற்கு கரோலினா, விஜீனியா  உள்ளிட்ட இடங்களில் கூகுள் தன் புதிய டேட்டா மையங்கள் மற்றும் அலுவலங்களை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகின்றன.இப்புதிய மையங்களை கட்டுவதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலைகிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. சென்ற ஆண்டில் அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக 9 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் கூகுள் நிறுவனத்திற்கென்று அமெரிக்காவில் 21 மாநிலங்களில் மையங்கள் இருப்பதாகவும் இன்னும் 24 மாநிலங்களில் இம்மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :