உடனே போரை நிறுத்துங்கள்: ஈரான்- இஸ்ரேல் நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்
உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு ஐநா பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இத்தாக்கலுக்கு பதிலடியாக, ஈரான் தனது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமாகும் முன் விரிவடைவதை கடுமையாக கண்டிக்கிறார். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; எங்களுக்கு முழுமையான போர் நிறுத்தம் தேவை, என பதிவிட்டுள்ளார்.
மேலும், லெபனானில் மோதல்கள் தீவிரமடைவதை பார்த்து அவர் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளார். உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும், லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வலியுறுத்தியுள்ளார்."
Edited by Siva