செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (08:39 IST)

அடங்காமல் ஆடும் ரஷ்யா! – அவசரமாக கூடும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!

உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை சுதந்திரமான பகுதிகளாக ரஷ்யா அறிவித்ததை தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று கூடுகிறது.

உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்ந்து ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் குழு உக்ரைனின் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை கைப்பற்றியிருந்தது. தற்போது அந்த மாகாணங்களை சுதந்திரமானவையாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் அறிவிப்பை தொடர்ந்து அந்த மாகாணங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இந்நிலையில் உக்ரைன் விவகாரம் குறித்து இன்று ஐ.நா அவசர கூட்டத்தை மேற்கொள்கிறது.