திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (08:18 IST)

உக்ரைனிலும் உருமாறிய கொரோனா வைரஸ்! – கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் நாடுகள்!

உலகம் முழுவதும் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் உக்ரைனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் கொரோனா பாதித்த பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, பிரேசில், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட வீரியமிக்க உருமாறிய கொரோனா மாதிரிகளும் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் நான்காவதாக உக்ரைனிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் உக்ரைனில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் உக்ரைனுடனான போக்குவரத்தை அண்டை நாடுகள் ரத்து செய்ய பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.