வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2024 (08:27 IST)

சிரியாவில் திடீரென தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம்.. 37 பயங்கரவாதிகள் பலி..!

சிரியாவில் திடீரென அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில், இந்த பயங்கரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவங்கள் அவ்வப்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அந்த வகையில், நேற்று திடீரென அமெரிக்க ராணுவம் வடக்கு சிரியாவில் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் அல்கொய்தா தொடர்புடைய ஒரு பயங்கரவாதி உள்பட 9 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் மத்திய சிரியாவிலும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் 37 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்தினால், வான்வழி தாக்குதல்கள் தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva