கொரோனா வைரஸால் 2 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்!

unemploynment
Prasanth Karthick| Last Modified சனி, 21 மார்ச் 2020 (15:58 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் வாய்ப்பு உள்ளதாக ஐ.நா சபையின் சர்வதேச ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளது ஒருபுறமிருக்க, மறுபுறம் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. நாடுகளிடையேயான பொருளாதார வீழ்ச்சியை கணக்கிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஊழியர்கள் அமைப்பு 2020ன் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சீனாவின் பொருளாதாரம் 13.5 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பொருளாதார அமைப்பில் ஏற்படும் சீர்குலைவுகள் உள்நாட்டு சிறுவணிகர்களை மிகவும் பாதிக்கும் எனவும், இதனால் உலகம் முழுவதும் இரண்டு முதல் இரண்டரை கோடி மக்கள் வரை தங்களது வேலையினை இழப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

இவற்றில் 74 லட்சம் பேர் அதிக வருமானம் பெறும் நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும், இதனால் உழைப்பாளர்களின் உழைப்பு 3 ட்ரில்லியன் டாலர்கள் வரை இழப்பை சந்திக்கும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :