வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (13:40 IST)

நான்தான் எலான் மஸ்க்.. ப்ளூ டிக் தாங்க! – எலான் மஸ்க்கை வெச்சு செஞ்ச நெட்டிசன்ஸ்!

Elon musk
ட்விட்டர் ப்ளூடிக்கிற்கு கட்டணம் கேட்ட எலான் மஸ்க் பெயரிலேயே பலர் அக்கவுண்ட் தொடங்கி ப்ளூடிக் வாங்கியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை உலக பில்லியனரான எலான் மஸ்க் வாங்கிய நிலையில் ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். முன்னதாக ட்விட்டரில் அதிகமானோரால் ஃபாலோவ் செய்யப்படும் பிரபலங்களுக்கு மட்டும் ட்விட்டர் ப்ளூடிக் வசதியை வழங்கி வந்தது.

ஆனால் தற்போது ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க் யார் வேண்டுமானாலும் மாதம் 8 டாலர் செலுத்தி ப்ளூ டிக் வசதியை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். மேலும் பிரபலங்களின் பெயரில் உருவாக்கப்படும் பரோடி கணக்குகளில் ‘பரோடி’ என குறிப்பிட வேண்டும். இல்லாவிட்டால் முன் அறிவிப்பின்றி கணக்கு நீக்கப்படும் என கூறியிருந்தார்.


இந்த புதிய விதிகளை எலான் மஸ்க்குக்கு எதிராக திருப்பியுள்ளனர் உலக நெட்டிசன்கள். எலான் மஸ்க் என்ற பெயரிலேயே பலர் அக்கவுண்ட் தொடங்கி ப்ளூடிக்கை வாங்கியுள்ளனர். இதனால் எது எலான் மஸ்க்கின் ஒரிஜினல் அக்கவுண்ட் என்பதே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோக மேலும் சிலர் இத்தாலிய எலான் மஸ்க், எலான் மஸ்க்கின் பசு என விதவிதமான பெயர்களில் அக்கவுண்ட் தொடங்கி அதற்கு பளூடிக்கும் வாங்கியுள்ளனர். இந்த எலான் மஸ்க் போலி அக்கவுண்டுகளும், ப்ளூ டிக்குகளும் சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியல் ஆகி வருகின்றது.

Edit By Prasanth.K