திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (12:26 IST)

பத்திரமாக இஸ்தான்புல் சேர்ந்த கெளதம் மேனன்

துருக்கி எல்லையில் சிக்கிக் கொண்ட கெளதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர், பத்திரமாக இஸ்தான்புல் சென்று சேர்ந்தனர்.

 
 
விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ளார் கெளதம் மேனன். ஜார்ஜியாவில் இருந்து இஸ்தான்புலுக்கு சாலை வழியாகச் சென்றபோது, துருக்கி நாட்டு எல்லையில் சிக்கிக் கொண்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உதவி கேட்க முடியாமல் 24 மணி நேரத்துக்கும்  அதிகமாகத் தவித்து வந்தனர்.
 
எனவே, உதவி கேட்டு நேற்று காலை கெளதம் மேனன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் கெளதம் மேனன். படப்பிடிப்பு  சாதனங்களுக்கான அனுமதி கடிதத்தில் ஏதோ குளறுபடி என்கிறார்கள். ஆனால், நேற்று மதியமே எல்லை பாதுகாப்புப்  படையினர் வந்து அவர்கள் செல்ல அனுமதி அளித்துவிட்டார்களாம். அவர்களும் இஸ்தான்புல் சென்று சேர்ந்துவிட்டனர். இந்த  மாத இறுதிவரை அங்கு ஷூட்டிங் நடைபெறுகிறது.